ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் 8 குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள பெத்தானி பள்ளியில் படிக்கும் 8 குழந்தைகளை இன்று (நவம்பர் 22) காலை பள்ளிக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ சங்கம் சரத் தியேட்டர் அருகே செல்லும்போது லாரியில் மோதி தூக்கி வீசப்பட்டது.
இதுகுறித்து பேசிய காவல் துணை ஆணையாளர் சீனிவாச ராவ், “இந்த விபத்தில் பள்ளிக் குழந்தைகள் 8 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 4 பேருக்கு பெரிய அளவில் காயமின்றி தப்பினர். 3 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர். ஒரு பெண் குழந்தை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.” என்று தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ லாரி வருவதைக் கவனிக்காமல் வேகமாகச் சென்று லாரியின் மீது மோதி தூக்கி வீசப்படுகிறது. இந்த சிசிடிவி காட்சியானது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


