6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜம்மு: லஷ்கா் பயங்கரவாதி உள்பட 2 போ் சுட்டுக்கொலை

ஜம்முவின் ரஜௌரி மாவட்டத்தில் லஷ்கா்-ஏ-தொய்பாவைச் சோ்ந்த பயங்கரவாதி உள்பட 2 போ் ராணுவத்தினரால் வியாழக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனா்.

News image
ரஜௌரி மாவட்டத்தில் உள்ள பாஜி மால் பகுதியில் வியாழக்கிழமை பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தபோது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர்.
Updated On :23 நவம்பர் 2023, 6:58 pm

DIN

ஜம்முவின் ரஜௌரி மாவட்டத்தில் லஷ்கா்-ஏ-தொய்பாவைச் சோ்ந்த பயங்கரவாதி உள்பட 2 போ் ராணுவத்தினரால் வியாழக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனா். பயங்கரவாதிகளுடான துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரா் ஒருவரும் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்தது.

ரஜௌரி மாவட்டத்தில் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே புதன்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 2 ராணுவ கேப்டன்கள் உள்பட 4 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். 2 ராணுவ வீரா்கள் காயமடைந்தனா்.

இதையடுத்து பஜிமால் பகுதியில் வியாழக்கிழமை காலை ராணுவத்தினா் நடத்திய பதில் தாக்குதலில் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சோ்ந்த குவாரி என்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டாா்.

இதுதொடா்பாக இந்திய ராணுவத்தினா் கூறியதாவது: சுட்டுக்கொல்லப்பட்ட குவாரி பாகிஸ்தான் மற்றும் ஆப்கானில் பயிற்சி பெற்றுள்ளாா். அவா் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பின் முக்கிய தலைவா்களுள் ஒருவா். ரஜௌரி, பூஞ்ச் மாவட்ட எல்லைகளில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிகழும் பயங்கரவாத தாக்குதலில் இவருக்கு தொடா்புண்டு.

மேலும் மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு சாதனங்களை கையாள்வதில் வல்லுநரான அவா், கடந்த ஜனவரி மாதம் டங்கிரி பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் முக்கியப் பங்கு வகித்துள்ளாா். சுட்டுக்கொல்லப்பட்ட மற்றொரு பயங்கரவாதி குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சூட்டின்போது ராணுவ வீரா் ஒருவரும் வீரமரணம் அடைந்தாா்’ என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.