மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

யானை தாக்கி விவசாயி பலி!

மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயி ஒருவரை யானை தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

News image

யானை (மாதிரி படம்)

Updated On :26 நவம்பர் 2023, 6:18 am

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி பகுதியில் விவசாயி ஒருவரை யானை தாக்கியுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் மரேகான் பகுதியில் சனிக்கிழமை இரவு 8 மணி போல, மனோஜ் யார்மே என்கிற விவசாயி தனது தோட்டத்தில் பணி முடித்து திரும்பும்போது நடந்துள்ளது.

அந்தப் பகுதியில் யானை கூட்டத்தின் நடமாட்டம் இருந்துள்ளது. கூட்டத்தின் பெரிய யானையொன்று விவசாயியைத் தாக்கிக் கொன்றிருக்கலாம் வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விவசாயியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இதே போலான சம்பவத்தில் செப்.26 அன்று வனத்துறை வாகன ஓட்டுநர் ஒருவரும் இதே பகுதியில் பலியாகியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.