

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி பகுதியில் விவசாயி ஒருவரை யானை தாக்கியுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் மரேகான் பகுதியில் சனிக்கிழமை இரவு 8 மணி போல, மனோஜ் யார்மே என்கிற விவசாயி தனது தோட்டத்தில் பணி முடித்து திரும்பும்போது நடந்துள்ளது.
அந்தப் பகுதியில் யானை கூட்டத்தின் நடமாட்டம் இருந்துள்ளது. கூட்டத்தின் பெரிய யானையொன்று விவசாயியைத் தாக்கிக் கொன்றிருக்கலாம் வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
விவசாயியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: உ.பி.: சிறுத்தை தாக்கி 5 வயது சிறுவன் பலி!
இதே போலான சம்பவத்தில் செப்.26 அன்று வனத்துறை வாகன ஓட்டுநர் ஒருவரும் இதே பகுதியில் பலியாகியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.