தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றம்!

மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி.முரளிதரனை கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. 

News image
எம்.வி. முரளிதரன்
Updated On :11 அக்டோபர் 2023, 9:53 am

DIN

மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி.முரளிதரனை கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. 

மணிப்பூரில் குக்கி - மைதேயி சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் பின்னர் கலவமரமாக வெடித்தது. கடந்த சில மாதங்களாக அந்த மாநிலத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. 

பழங்குடியின அந்தஸ்து வேண்டும் என்று கோரி மைதேயி சமூகத்தினர் தொடர்ந்த வழக்கில், மைதேயி சமூகத்தினரை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று மணிப்பூர் உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி எம்.வி.முரளிதரன் உத்தரவு பிறப்பித்திருந்தார். 

இதன்பின்னர் குக்கி சமூகத்தினர் நடத்திய பேரணியில்தான் முதல் கலவரம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்த வழக்கில் மணிப்பூர் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானது அல்ல என்று உச்சநீதிமன்றமும் கூறியிருந்தது. 

இந்த சூழ்நிலையில், மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி.முரளிதரனை கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற உச்சநீதிமன்ற கொலீஜியம் இரண்டாவது முறையாக பரிந்துரை செய்துள்ளது. 

தனது சொந்த மாநிலத்தில் தமிழ்நாட்டில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற நீதிபதி முரளிதரனின் கோரிக்கையை கொலீஜியம் ஏற்க மறுத்துவிட்டது.

அதேநேரத்தில் தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சித்தார்த் மிருதுலை மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் ஜூலை மாதம் பரிந்துரைத்த நிலையில் மத்திய அரசு இன்னும் அதுகுறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.