பிகார் ரயில் விபத்து: மீட்புப் பணிகள் முடிவு!

பிகாரில் ரயில் விபத்தில் மீட்புப் பணிகள் முடிவடைந்ததாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார்.
பிகார் ரயில் விபத்து: மீட்புப் பணிகள் முடிவு!

பிகாரில் ரயில் விபத்தில் மீட்புப் பணிகள் முடிவடைந்ததாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார்.

தில்லியின் அனந்த் விகாா் முனையத்திலிருந்து அஸ்ஸாமின் காமாக்யா நோக்கிச் சென்ற வடகிழக்கு விரைவு ரயில் பிகாரின் பக்ஸாா் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூா் ரயில் நிலையம் அருகே புதன்கிழமை இரவு 9.35 மணியளவில் தடம் புரண்டது.

இந்த சம்பவத்தில் ரயிலின் 21 பெட்டிகள் தடம்புரண்டன. இதில், 4 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர்50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை, ரயில்வே காவலர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இந்த விபத்து குறித்து எக்ஸ் தளத்தில் தகவல் வெளியிட்டுள்ள ரயில்வே அமைச்சர், “விபத்து நடைபெற்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும். மீட்புப் பணிகள் முடிவடைந்தது. மாற்று ரயில் மூலம் பயணிகள் காமாக்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 296 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com