
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், 21 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை ஆம் ஆத்மி இன்று வெளியிட்டுள்ளது.
முன்னதாக, அக்டோபர் 26-ம் தேதி 23 வேட்பாளர்கள் முதல் பட்டியலை அக்கட்சி அறிவித்த நிலையில், பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது.
பிகானர் மேற்கு தொகுதியில் மணிஷ் சர்மாவையும், ரோஹித் ஜோஷி, முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி ஆர்.பி.மீனா, ஹர்தன் சிங் குஜ்ஜர் ஆகியோர் ஜோத்பூர், சாப்ரா மற்றும் பெஹ்ரோர் ஆகிய தொகுதியிலும் களத்தில் இறங்க உள்ளனர்.
முகேஷ் பூபிரேமி, லால் சிங், திபேஷ் சோனி, விஸ்வேந்தர் சிங் ஆகியோர் முறையே சவாய் மாதோபூர், பாலி, கான்பூர் மற்றும் ராம்கர் ஆகிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்கலாம்: சந்திர கிரகணம்: எந்தெந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்?
ஜாபர் சிங் கிச்சார், ஹேமந்த் குமார் குமாவத், டாக்டர் சஞ்சு பாலா, திலீப் குமார் மீனா, அர்ச்சித் குப்தா, பூரன் மால் காடிக், ஹீனா ஃபிரோஜ் பெய்க், ரோஹிதாஷ் சதுர்வேதி ஆகியோர் முறையே சிகார், சோமு, ரத்தன்கர், பிபால்டா, சிவில் லைன்ஸ், ஷாபுரா, கரௌலி மற்றும் நட்பாய் ஆகிய இடங்களில் போட்டியிடுகின்றனர். .
ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி முன்னதாக அறிவித்திருந்தது.
200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நவம்பர் 25-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு டிசம்பர் 3-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...