உலகக் கோப்பையில் புதிய சாதனை படைத்த இந்திய அணி!

உலகக் கோப்பையில் அதிக வெற்றிகளைப் பெற்ற இரண்டாவது அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.
உலகக் கோப்பையில் புதிய சாதனை படைத்த இந்திய அணி!
Published on
Updated on
1 min read

உலகக் கோப்பையில் அதிக வெற்றிகளைப் பெற்ற இரண்டாவது அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.

உலகக் கோப்பையில் லக்னௌவில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி தொடர்ச்சியாக 6 வெற்றிகளைப் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் வலுவாக உள்ளது. 

நேற்றையப் போட்டியில் இந்திய அணியின் வெற்றி உலகக் கோப்பையில் இந்தியா பெறும் 59-வது வெற்றியாகும். இதன்மூலம், நியூசிலாந்தை பின்னுக்குத் தள்ளி உலகக் கோப்பையில் அதிக வெற்றிகள் பெற்ற இரண்டாவது அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. இந்தப் பட்டியலில் 58 வெற்றிகளுடன் நியூசிலாந்து 3-வது இடத்தில் உள்ளது.

உலகக் கோப்பையில்  73 வெற்றிகளுடன் இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி  மிகவும் வெற்றிகரமான அணியாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com