கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எடுத்திருக்கும் புதிய ஆயுதம்

காங்கிரஸ் கட்சியை விடவும், ராகுல் காந்திக்கு எதிராக பல தாக்குதல்களை தொடுப்பதில் தீவிரம் காட்டி வரும் பாஜக, தற்போது புதிய ஆயுதத்தைக் கையிலெடுத்திருக்கிறது.

News image

ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும்

Updated On :12 செப்டம்பர் 2023, 9:20 am

DIN


காங்கிரஸ் கட்சியை விடவும், ராகுல் காந்திக்கு எதிராக பல தாக்குதல்களை தொடுப்பதில் தீவிரம் காட்டி வரும் பாஜக, தற்போது புதிய ஆயுதத்தைக் கையிலெடுத்திருக்கிறது.

வரும் மக்களவைத் தேர்தல் மோடிக்கும் - ராகுலுக்கும் இடையேயான போட்டியாகப் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான், இந்தியா கூட்டணியை உடைக்கவும், ராகுல் காந்தி என்ற மிக முக்கியத் தலைவரின் பிம்பத்தை குறைக்கவும் பாஜக மறைமுகமாக வேலை செய்து வருகிறது என்றே கூறப்படுகிறது.

இதற்காக அவர்கள் தற்போது கையிலெடுத்திருப்பது ராகுல் - பிரியங்கா இடையேயான உறவைத்தான். பாஜகவின் எக்ஸ் பக்கத்தில், ராகுல் - பிரியங்கா உறவில் ஏற்பட்டிருக்கும் விரிசல் பற்றி சில கருத்துகளும் அதனை உறுதி செய்யும் வகையில் சில விடியோக்களையும் இணைத்துள்ளது.

அந்த விடியோவுடன் இந்தக் கருத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ராகுல் காந்திக்கும், பிரியங்காவுக்கும் இடையே உள்ள உறவு, பொதுவான சகோதர, சகோதரிகளுக்கு இடையேயான உறவு அல்ல.

இதையும் படிக்க.. இந்தியாவில் மனித உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் பற்றி மோடியுடன் பேசினேன்: ஜோ பைடன்

ராகுலை விட பிரியங்கா வேகமானவர் ஆனால் ராகுலின் இசைக்கு ஏற்றபடிதான் கட்சி ஆடுகிறது, சோனியா காந்தியும் முழுமையாக ராகுலுக்குத்தான் ஆதரவை தெரிவிக்கிறார். ஆணவக் கூட்டணியின் சந்திப்பில் இருந்து பிரியங்கா காணாமல் போனதற்கு காரணம் இல்லாமல் இல்லை!

அந்த சகோதரியை தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டும் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை வீடியோவில் பாருங்கள் என்று பதிவிடப்பட்டுள்ளது.

பாஜக வெளியிட்டிருக்கும் விடியோவில், தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது, ராகுல் காந்தி, பிரியங்காவுடன் கைகோர்க்க முன்வந்தார். ஆனால், அதனை பிரியங்கா நிராகத்திருப்பதை பாஜக இங்கே வட்டமிட்டுக் காண்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.