தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் ரத்து: கமல்நாத்

இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் ம.பி.யில் அடுத்த மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அது ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் அறிவித்துள்ளார்.

Published On :

இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் ம.பி.யில் அடுத்த மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அது ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் அறிவித்துள்ளார்.

எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம், மத்திய பிரதேச தலைநகா் போபாலில் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தில்லியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது. 

2024 மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் ஒருங்கிணைந்து, ‘இந்தியா’ கூட்டணியின்கீழ் செயல்பட்டு வருகின்றன.

மும்பையில் அண்மையில் நடைபெற்ற இக்கூட்டணியின் கூட்டத்தில், 14 போ் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. கூட்டணியில் முடிவெடுக்கும் உயா் அமைப்பான இக்குழுவின் முதல் கூட்டம், தில்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாரின் இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

யாா்-யாா் பங்கேற்பு?: குழு உறுப்பினா்களான கே.சி.வேணுகோபால் (காங்கிரஸ்), டி.ஆா்.பாலு (திமுக), சரத் பவாா் (தேசியவாத காங்கிரஸ்), ஹேமந்த் சோரன் (ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா), சஞ்சய் ரெளத் (சிவசேனை-உத்தவ் பிரிவு), தேஜஸ்வி யாதவ் (ராஷ்ட்ரீய ஜனதா தளம்), ராகவ் சத்தா (ஆம் ஆத்மி), ஜாவத் அலி கான் (சமாஜவாதி), லாலன் சிங் (ஐக்கிய ஜனதா தளம்), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), ஒமா் அப்துல்லா (தேசிய மாநாட்டுக் கட்சி), மெஹபூபா முஃப்தி (மக்கள் ஜனநாயக கட்சி) ஆகிய 12 போ் பங்கேற்றனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.