மணிப்பூர் பதற்றமான மாநிலமாக அறிவிப்பு

மணிப்பூர் மாநிலம் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.
மணிப்பூர் பதற்றமான மாநிலமாக அறிவிப்பு


புது தில்லி: மணிப்பூர் மாநிலத்தை பதற்றம் நிறைந்த மாநிலமாக அந்த மாநில உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மணிப்பூரில் மைதேயி மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே நடந்த வன்முறையைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக அவ்வப்போது படுபயங்கர வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், 19 காவல்நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளைத் தவிர்த்து பிற பகுதிகள் பதற்றம் நிறைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது, அடுத்த ஆறு மாதங்களுக்கு நீடிக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, வன்முறைச் சம்பவங்களின் போது பல மாவட்டங்களில் பதற்றமான பகுதிகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் (ஏஎஃப்எஸ்பிஏ) என்பது இந்திய ஆயுதப் படைகள் மற்றும் மாநில மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு "பதற்றமான பகுதிகள்" என வகைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சிறப்பு அதிகாரங்களை வழங்கும் சட்டமாகும்.

மணிப்பூரில் உள்ள 19 காவல் நிலைய எல்லைகளுக்கு உள்பட்ட பகுதிகள் தவிர்த்து, மற்ற பகுதிகள் பதற்றமான பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி, இந்த மாநிலத்தின் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக, 19 காவல்நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளைத் தவிர்த்து மாநிலம் முழுமைக்கும் ஆளுநரே உத்தரவுகளை பிறப்பிப்பார் என்றும் இது அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரியிருந்தனர். இதற்கு குக்கி-நாகா சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில், இவ்விரு சமூகத்தினருக்கும் இடையே பெரும் கலவரம் மூண்டது. இதில் 120 போ் வரை உயிரிழந்தனா். ஏராளமான வீடுகளும் வழிபாட்டுத் தலங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. அது முதல் தொடர்ந்து மணிப்பூரில் வன்முறை வெறியாட்டங்கள் நடந்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com