10 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்த நாடாக இந்தியா!

அடுத்த 10 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்த நாடாக இந்தியா மாற வேண்டும்.
10 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்த நாடாக இந்தியா!

இந்திய ரிசர்வ் வங்கி நிறுவப்பட்டு 90வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி மும்பையில் இன்று(எப்ரல். 1) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பேசியதாவது, தொழில்முறை, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உலகம் முழுவதும் ஒரு அடையாளத்தை ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ளது. ரிசர்வ் வங்கியின் அடுத்த பத்தாண்டுகளை வடிவமைக்கும் வகையில் கொள்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

2014 காலகட்டத்தில் பலவீனமான நிலையில் இருந்த வங்கி அமைப்பு தற்போது லாபகரமாக இயங்குகின்றன. தெளிவான கொள்கைகளே இந்த மாற்றத்திற்குக் காரணம். பொதுத்துறை வங்கிகளுக்கு உதவுவதற்காக ரூ. 3.5 லட்சம் கோடியை அரசு மூலதனமாக அளித்துள்ளது.

பல நாடுகளின் தனியார் துறை கடன், அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை இரட்டிப்பாக்கியுள்ளது. இது குறித்தும் ஆலோசிக்க வேண்டும்.

அடுத்த 10 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்த நாடாக இந்தியா மாற வேண்டும். உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீத பங்களிப்புடன், உலக வளர்ச்சியின் இயந்திரமாக இந்தியா மாறி வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com