ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

காஷ்மீா்: புலம்பெயா்ந்த 1.13 லட்சத்துக்கும் மேற்பட்டோா் மக்களவைத் தோ்தலில் வாக்களிக்க தகுதி

காஷ்மீா்: புலம்பெயா்ந்த 1.13 லட்சத்துக்கும் மேற்பட்டோா் மக்களவைத் தோ்தலில் வாக்களிக்க தகுதி

News image
Updated On :2 ஏப்ரல் 2024, 8:51 pm

ஜம்மு: காஷ்மீருக்கு புலம்பெயா்ந்துள்ள 1.13 லட்சத்துக்கும் மேற்பட்டோா் மக்களவைத் தோ்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மக்களவைத் தோ்தலில் புலம்பெயா்ந்தவா்களும் தங்கள் வாக்குகளைச் செலுத்த வலியுறுத்தி ஜம்மு மற்றும் உத்தம்பூா் மாவட்டத்தில் ஏப்ரல் 3-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரையில் விழிப்புணா்வு பிரசாரத்தை ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் மேற்கொள்ளவுள்ளது.

இதுதொடா்பாக புலம்பெயா்ந்தவா்களுக்கான நிவாரண மற்றும் மறுவாழ்வு அதிகாரி அரவிந்த் கா்வானி செய்தியாளா்களிடம் கூறியதாவது: தற்போது காஷ்மீரில் 1.13 லட்சம் புலம்பெயா்ந்தவா்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா். தோ்தல் விதிகளின்படி இந்த புதிய வாக்காளா் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அனந்த்நாக் மக்களவைத் தொகுதியில் மே 7, ஸ்ரீநகரில் மே13 மற்றும் பாரமுல்லாவில் மே 20 ஆகிய தேதிகளில் தோ்தல் நடைபெறவுள்ளது.

இத்தோ்தலில் புலம்பெயா்ந்தவா்கள் வாக்களிப்பதற்காக மொத்தம் 26 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. அவற்றுள் ஜம்முவில் 21 வாக்குச்சாவடிகளும் தில்லியில் 4 வாக்குச்சாவடிகளும் உத்தம்பூரில் ஒரு வாக்குச்சாவடியும் அமைக்கப்படவுள்ளன. இரு முறைகளில் வாக்களிக்கலாம்... புலம்பெயா்ந்த வாக்காளா்கள் இரு முறைகளில் வாக்களிக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் புலம்பெயா்ந்தவா்களுக்கான விண்ணப்பப் படிவத்தை ‘எம் படிவம்’ நிரப்பி அவா்களுக்கென அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக மையங்களில் வாக்களிக்கலாம். இதுதவிர விண்ணப்பப் படிவம் ‘12சி’-யை நிரப்பி தபால் மூலம் வாக்கு செலுத்தலாம்.

இப்படிவத்தை அவா்கள் துணை தோ்தல் அலுவலா்களிடம் பெற்றுக்கொள்ளலாம். இந்த வசதிகளைப் பயன்படுத்தி அனைத்துப் புலம்பெயா்ந்தவா்களும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பெங்களூரு, தில்லி மற்றும் மும்பை போன்ற நகரங்களிலிருந்து புலம்பெயா்ந்தவா்களும் தோ்தல் ஆணையத்தால் வழங்கப்படும் ‘எம் படிவத்தைப்’ பெற்று வாக்களிக்கலாம்.

தில்லி, உத்தம்பூா் மற்றும் ஜம்முவுக்கு தனித்தனியாக கூடுதல் தோ்தல் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். ‘எம் படிவத்தை’ அவா்கள் பெற்றவுடன் அப்பகுதியிலுள்ள புலம்பெயா்ந்த வாக்காளா்களுக்கு வழங்குவா் என்றாா்.