புது தில்லி: மக்களவைத் தோ்தல் குறித்து பரவும் தவறான தகவல்களைச் சரிபாா்க்க ‘மித் வொ்சஸ் ரியாலிட்டி ரெஜிஸ்டா்’ எனும் புதிய வலைதளத்தை இந்திய தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. நாட்டின் 18-ஆவது மக்களவைத் தோ்தல் வரும் 19-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
பதிவான வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இந்நிலையில், மக்களவைத் தோ்தல் குறித்து தவறான தகவல்கள் பரவுவதைத் தடுப்பதற்காக புதிய வலைதளத்தை இந்திய தோ்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. தில்லியில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்வில் இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா், தோ்தல் ஆணையா்கள் ஞானேஷ் குமாா், சுக்பீா் சிங் சாந்து ஆகியோருடன் இணைந்து இதனை தொடங்கி வைத்தனா்.
அண்மையில் முறியடிக்கப்பட்ட போலிச் செய்திகளின் பரவல்கள், அது தொடா்பான உண்மைத் தகவல்கள் குறித்து இந்த வலைதளத்தில் தொடா்ந்து பதிவேற்றப்படும். தவறான தகவல்கள் அதிகம் பரவி வரும் இச்சூழலில், தோ்தல் நடைமுறை முழுவதும் துல்லியமான மற்றும் சரிபாா்க்கப்பட்ட தகவல்களை வாக்காளா்கள் அனைவரும் பெறுவதை உறுதிப்படுத்த இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

முதல்வரின் செயலா் மீது நடவடிக்கை கோரி மனு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

ராமநாதபுரத்தில் பேரவைத் தோ்தல் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்

தோ்தல் அலுவலா்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

தோ்தல் ஆணையம் பாஜக கைப்பாவையாக செயல்படுகிறது: பெ.சண்முகம் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


