வயநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பேரணி தொடங்கியது.
2019 மக்களவைத் தேர்தலில் நான்கு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வயநாட்டில் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சாலையில் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.
2019 மக்களவைத் தேர்தலில் வயநாட்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இந்த முறை மீண்டும் வயநாட்டில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, புதன்கிழமை காலை கேரளம் வந்த ராகுல் காந்தி, மாவட்ட ஆட்சியர் நோக்கி ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் பேரணியாக சென்று கொண்டுள்ளார்.
அவரது சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், உள்ளிட்டோரும் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக, ராகுலை எதிர்த்து போட்டியிடும் இடதுசாரி வேட்பாளர் ஆனி ராஜாவும், பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
கேரளத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
2019 நாடாளுமன்றத் தேர்தலில், ராகுல் காந்தி மொத்தம் 10,92,197 வாக்குகளில் 7,06,367 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்!
டிரம்ப்புக்கு மோடி; அதுபோல தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு கூட்டாளி முதல்வர் தேவை! ராகுல் பேச்சு
தமிழகம் வந்தார் ராகுல் காந்தி!

தேர்தல் பிரசாரம்! தமிழ்நாட்டை ராகுல் காந்தி மறந்துவிட்டாரா? அல்லது புறக்கணிக்கிறாரா?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


