கர்நாடகத்தில் பாஜக சொல்வதும், காங்கிரஸ் செய்ததும்!

கர்நாடகத்தில் அனைத்துத் தொகுதிகளையும் வெல்வோம் என பாஜக சொல்கிறது. ஆனால், அதனை காங்கிரஸ் செய்திருக்கிறது.
105-year-old woman casts vote in third phase of DDC elections in J-K
105-year-old woman casts vote in third phase of DDC elections in J-K

கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளையும் பாஜக - மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றும் என்று பிரசாரம் மேற்கொள்ளப்பட்டாலும், உண்மையிலேயே, 1971ம் ஆண்டு ஒரே ஒரு கட்சி அனைத்துத் தொகுதிகளையும் வென்றது.

அது காங்கிரஸ் கட்சி படைத்த சாதனை என்றே சொல்லலாம். கடந்த ஒரு சில வாரங்களாகவே, பாஜகவினர் பலரும், கர்நாடகத்தில் பேசும்போதும் சரி, பிரசாரத்தின் போதும் சரி, அனைத்து 28 தொகுதிகளையும் நாங்கள் கைப்பற்றுவோம் என்று கூறுகிறார்கள்.

ஆனால், 1951ஆம் ஆண்டு முதல் இதுவரை நடந்த 17 தேர்தல்களில், அப்படி ஒரு சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அது நடந்தது 1971ஆம் ஆண்டு என்றும், அந்த சாதனையைப் படைத்தது காங்கிரஸ் என்றும் புள்ளிவிவரங்கள் சொல்லுகின்றன.

105-year-old woman casts vote in third phase of DDC elections in J-K
மகாராஷ்டிரத்தில் 4 தொகுதிகளைப் பறிக்கும் முனைப்பில் பாஜக: என்ன செய்யப்போகிறது சிவ சேனை?

இத்தனைக்கும் இந்த தேர்தல், காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்திருந்து, இந்திரா காந்தி தலைமையில் சந்தித்த தேர்தல். ஆனாலும், ஆந்திரத்திலும், தமிழகத்திலும் செய்தது போல, கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளூர் காட்சியாக தனது அடையாளத்தை ஏற்படுத்தத்தவறிவிட்டது. உள்ளூர் கட்சியாக இல்லாதபோதும், காங்கிரஸ், ஜனதா கட்சிகள், பாஜக போன்றவை ஒரு மாநிலத்தில் அனைத்துத் தொகுதிகளையும் வெல்கிறது என்றால், அது மாநிலங்களின் உள்ள கட்சி நிர்வாகிகளின் திறமைதான் என்றும், எதிர்க்கட்சிகளின் பலவீனமும் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி 17 முதல் 20 தொகுதிகளை வெல்லலாம் என்று பல்வேறு கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. எனினும், இதுவரை ஒருமுறை கூட அனைத்துத் தொகுதிகளிலும் செல்ல முடியாத பாஜக, அனைத்துத் தொகுதிகளிலும் வெல்வோம் என தொடர்ந்து பேசிவரும் நிலையில், தனது சாதனையை மீண்டும் படைப்போம் என்று காங்கிரஸ் கட்சியே நினைத்தாலும், அந்த வரலாறு திரும்புமா? என்பது கேள்விக்குறியே

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com