காங்கிரஸில் இருந்து சஞ்சய் நிருபம் நீக்கம்!

6 ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார் சஞ்சய் நிருபம்.
சஞ்சய் நிருபம்
சஞ்சய் நிருபம்

காங்கிரஸ் கட்சியில் இருந்து மகாராஷ்டிர முன்னாள் தலைவர் சஞ்சய் நிருபத்தை நீக்குவதாக கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சியான சிவசேனை(உத்தவ் அணி) 17 மக்களவைத் தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்ததை எதிர்த்து சஞ்சய் நிருபம் சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸுக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் குற்றச்சாட்டை அடுத்து சஞ்சய் நிருபத்தை 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கம் செய்ய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளதாக வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் இருந்தும் அவரது பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் ஆளும் பாஜக கூட்டணியில் சஞ்சய் நிருபம் இணைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலின்போது சிவசேனைக்கு எதிராக கருத்து தெரிவித்த சஞ்சய் நிருபத்தை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்து கட்சியின் தலைமை எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com