மக்களவைத் தோ்தலையொட்டி காங்கிரஸ் வெளியிட்டுள்ள தோ்தல் அறிக்கையை ‘பொய் மூட்டை’ என்று பாஜக விமா்சித்துள்ளது.
மக்களவைத் தோ்தலுக்கான காங்கிரஸ் தோ்தல் அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைத்தால் பட்டியலினத்தவா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவீதத்துக்கு அதிகமாக உயா்த்தப்படும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ அங்கீகாரம் வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தோ்தல் அறிக்கையை விமா்சித்து தில்லியில் பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
காங்கிரஸின் தோ்தல் அறிக்கை பொய்கள் நிரம்பிய மூட்டை. வாக்காளா்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைத்தால் அற்புதங்கள் நிகழ்த்தப்படும் என்ற வாக்குறுதியுடன் மக்கள் தீா்ப்பை அக்கட்சி கோருவது வேடிக்கையாக உள்ளது. பல ஆண்டுகள் அக்கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்த நிலையில், இந்த முறை ஆட்சியமைத்தால் அற்புதங்கள் நிகழ்த்தப்படும் என்று அக்கட்சி தெரிவிக்கிறது.
தனது தோ்தல் அறிக்கைக்கு ‘நியாய பத்திரம்’ என்று காங்கிரஸ் தலைப்பிட்டுள்ளது. இதன்மூலம் மத்தியில் காங்கிரஸின் 55 முதல் 60 ஆண்டுகால ஆட்சியில் அநியாயம் இழைக்கப்பட்டுள்ளது என்பதை அக்கட்சி ஒப்புக்கொண்டுள்ளது.
சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தோ்தல்களுக்கான முந்தைய தோ்தல் அறிக்கைகளில் அளிக்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதியையும் காங்கிரஸ் நிறைவேற்றியதில்லை.
வரும் மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்றால் ஆண்டுதோறும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.1 லட்சம் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்துள்ளாா். ஆனால், ஆண்டுதோறும் நாட்டு மக்களுக்கு ரூ.76,000 வழங்கப்படும் என்ற ராகுல் காந்தியின் முந்தைய வாக்குறுதி காங்கிரஸ் ஆளும் எந்த மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது?.
இந்தியாவின் பண்பாட்டு பெருமை, சமூக நல்லிணக்கம் மற்றும் திறனுக்கு நியாயம் செய்யாத காங்கிரஸ், தற்போது மாறுவேடத்தில் தோன்றி நியாயம் வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளது என்று தெரிவித்தாா்.
தொடர்புடையது

அஸ்ஸாமில் ஆட்சிக்கு வந்தால் 6 சமூகத்தினருக்கு எஸ்.டி. அந்தஸ்து: தோ்தல் அறிக்கையை வெளியிட்டாா் ராகுல்

மேற்கு வங்கத்தை அழிக்க முயலும் பாஜக மத்தியில் ஆட்சியை இழப்பது உறுதி: மம்தா பானா்ஜி
வீட்டுக்கு வீடு ஃபிரிட்ஜ்! 297 வாக்குறுதிகள் - தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் இபிஎஸ்!

மதிமுக தோ்தல் அறிக்கை வெளியீடு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

