விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருடுபோன ஜெ.பி.நட்டா மனைவியின் கார் வாராணசியில் மீட்பு!

News image
Updated On :7 ஏப்ரல் 2024, 6:59 am

DIN

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மனைவியின் திருடுபோன கார் 20 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.

தெற்கு தில்லி கோவிந்தபுரியில் உள்ள கார் சர்வீஸ் சென்டரில் நட்டா மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் மார்ச் 19ஆம் தேதி சர்வீஸுக்காக விடப்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து காரை நட்டா மனைவியின் ஓட்டுநர் ஜோகிந்தர் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். அப்போது அந்த கார் திருடுபோனது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, தெற்கு தில்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காரை தேடி வந்தனர். கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்ததில், திருடப்பட்ட கார் குருகிராம் நோக்கிச் சென்றதாகவும், ஹிமாச்சல் நம்பர் பிளேட் அதில் பொறுத்தப்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் திருடுபோன கார் 20 நாட்களுக்கு பிறகு உத்திரப் பிரதேச மாநிலம் வாராணசியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக 2 பேரை தில்லை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில், திருடிய காரை அவர்கள் நாகாலாந்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.