மும்பை: வாக்குப்பதிவு நாளன்று ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்!

வாக்களிக்க ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அல்லது இரண்டு மணி நேர இடைவெளி உறுதி
கோப்புப் படம்
கோப்புப் படம்

மும்பை: மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அல்லது இரண்டு மணி நேர விடுமுறை வழங்க வேண்டும் என்று மும்பை புறநகர் மாவட்டத்தின் ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார். ஒருவேலை விடுமுறை அளிக்கவில்லை என்று ஊழியர்கள் புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மும்பை புறநகர் மாவட்டத்தில் ஐந்தாம் கட்டமாக மே 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தேர்தல் அதிகாரியும், மும்பை புறநகர் மாவட்ட ஆட்சியருமான ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய பிரநிதித்துவ சட்டத்தின்படி தோ்தலில் வாக்களிப்பது மக்களின் ஜனநாயக கடமையாகும்.

தொழிலாளா்கள் மக்களவைத் தோ்தலில் வாக்களிப்பதற்கு ஏதுவாக மே 20 ஆம் தேதி ஊதியத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும். தொழிலாளா்களுக்கு நாள் முழுவதும் விடுமுறை அளிக்க முடியாத நிறுவனங்கள், ஆட்சியர் அலுவலக அனுமதியுடன் 2 மணி நேரம் ஓய்வு அளிக்க வேண்டும் என்றார்.

புகார்கள் பதிவாகும் பட்சத்தில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com