மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

மாதவிடாய் விடுப்பு அளித்தால் பெண்களை வேலைக்கு அமர்த்த மாட்டார்கள்: உச்சநீதிமன்றம்

பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய கட்டாய விடுப்பு அளிக்கக் கோரிய மனு தள்ளுபடி...

Nobody Will Hire Women: Supreme Court Turns Down Plea On Menstrual Leaves

கோப்புப் படம் - ANI

Published On :

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் கட்டாய விடுப்பு என்று சட்டம் கொண்டுவந்தால் அது பெண்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

பணிபுரியும் பெண்களுக்கு நிறுவனங்களில் மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய கட்டாய விடுப்பு அளிக்க மாநிலங்களுக்கு சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஷைலேந்திர மணி திரிபாதி என்பவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று(வெள்ளிக்கிழமை) தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது விசாரணையின்போது நீதிபதிகள்,

"பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் கட்டாய விடுப்பு என்று சட்டம் கொண்டுவந்தால் அது பெண்களின் வாழ்க்கையைப் பாதிக்கும். ஊதியத்துடன் விடுப்பு என்றால் நிறுவன உரிமையாளர்கள், பெண்களை வேலைக்கு அமர்த்த மாட்டார்கள். பெண்களின் வாய்ப்புகள் பறிபோகும்.

அது பெண்களிடையே உளவியல்ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும். ஆண்களைவிட பெண்கள் தாழ்வானர்கள் என்ற பிம்பத்தை உருவாக்கும்.

விழிப்புணர்வை ஏற்படுத்துவது வேறு, கட்டாயமாக்கும் சட்டத்தைக் கொண்டு வருவது வேறு, சில நிறுவனங்கள் தாமாக முன்வந்து பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளிக்கின்றன, அது வரவேற்கத்தக்கது. ஆனால், அனைத்து நிறுவனங்களுக்கும் கட்டாயமாக்கினால் அது பணியிடங்களில் பெண்களின் பங்கைக் குறைக்கும். அரசியலமைப்புரீதியாக பெண்களுக்கு உரிமைகள் உள்ளன. ஆனால், சந்தை நிலவரத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இதுவரை இதுதொடர்பாக எந்த பெண்ணும் நீதிமன்றத்தை அணுகவில்லை" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Summary

Nobody Will Hire Women: Supreme Court Turns Down Plea On Menstrual Leaves

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.