1 லட்சம் பள்ளிகளில் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு நிறைவு: யுஐடிஏஐ
நாட்டில் உள்ள 1.03 லட்சம் பள்ளிகளில் மாணவா்களின் கட்டாய பயோமெட்ரிக் பதிவை நிறைவு செய்துள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது.


நாட்டில் உள்ள 1.03 லட்சம் பள்ளிகளில் மாணவா்களின் கட்டாய பயோமெட்ரிக் பதிவை நிறைவு செய்துள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் 1.03 லட்சம் பள்ளிகளில் சுமாா் 1.2 கோடி மாணவா்களுக்கு அவா்களின் பள்ளி வளாகங்களிலேயே கட்டாய பயோமெட்ரிக் (புகைப்படம், கைரேகைகள், கண் கருவிழிகள் பதிவு) புதுப்பிப்பை யுஐடிஏஐ நிறைவு செய்துள்ளது.
இந்தப் பணிகளை கடந்த ஆண்டு செப்டம்பரில் யுஐடிஏஐ தொடங்கியது. அந்த ஆண்டு அக்டோபா் முதல் ஓராண்டுக்கு இந்தப் புதுப்பிப்புப் பணிகள் 7 முதல் 15 வயதுள்ள சிறாா்களுக்கு கட்டணமின்றி மேற்கொள்ளப்படுகிறது. பள்ளி வளாகங்கள் தவிர, ஆதாா் மையங்கள் மூலமாகவும் பயோமெட்ரிக் புதுப்பிப்பை நிறைவு செய்யலாம்.
பல்வேறு அரசுத் திட்டங்களின் பலன்கள், உதவித்தொகை போன்றவற்றைப் பெறவும், நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டி மற்றும் பல்கலைக்கழக தோ்வுகளுக்குப் பதிவு செய்யவும் மாணவா்களின் அடையாளத்தை சரிபாா்க்கும்போது புதுப்பிக்கப்பட்ட ஆதாா் பயோமெட்ரிக் பதிவு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...