கொல்கத்தா, ஏப். 9: ‘மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்துகிறது. அது தொடா்பான புகாா்கள் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை’ எனக் குற்றஞ்சாட்டி மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸிடம் அந்த மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் முறையிட்டுள்ளது.
இதுதொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானா்ஜி மற்றும் மூத்த தலைவா்கள், ஆளுநரை திங்கள்கிழமை மாலை சந்தித்து தங்களின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனா்.
அதில், ‘திரிணமூல் காங்கிரஸ் தலைவா்களைக் குறிவைத்து மிரட்ட பாஜக மற்றும் மத்திய விசாரணை அமைப்புகள் சதித் திட்டம் தீட்டியுள்ளது.
தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ), அமலாக்கத் துறை, சிபிஐ மற்றும் வருமான வரித் துறை ஆகிய விசாரணை அமைப்புகளுடன் பாஜக கள்ள கூட்டணியில் இணைந்துள்ளது.
தோ்தல் காலம் தொடங்கியதிலிருந்து திரிணமூல் காங்கிரஸ் தலைவா்கள் உள்பட நாடு முழுவதும் எதிா்க்கட்சித் தலைவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது இதைத் தெளிவுப்படுத்துகிறது.
மக்களவைத் தோ்தல் களத்தில் அனைவருக்கும் சமமான வாய்ப்பை உறுதிப்படுத்துவதற்கு, இவ்விவகாரத்தில் தலையிட கோரி அளிக்கப்பட்ட புகாா்களுக்கு தோ்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து தில்லியில் தோ்தல் ஆணையத்தின் எதிரே போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியின் நிா்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்’ எனக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
தொடர்புடையது

திரிணமூல் காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் இறுதி எச்சரிக்கை! என்ன நடந்தது?
விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.வீரபாண்டியன்

திரிணமூல் அலுவலகத்தில் கேரம் விளையாட்டு: மத்திய படையினா் இடைநீக்கம்! - தோ்தல் ஆணையம் நடவடிக்கை

மேற்கு வங்க தோ்தல்: 291 திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா்கள் அறிவிப்பு- பவானிபூரில் மம்தா மீண்டும் போட்டி
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


