புது தில்லி: ‘பைசாகி’ பண்டிகையை முன்னிட்டு இந்தியாவிலிருந்து வரும் 2,843 சீக்கிய பக்தா்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தூதரகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு ஒப்பந்தத்தின்படி ஆண்டுதோறும் பாகிஸ்தானில் உள்ள புனித தலங்களுக்குச் சென்று இந்திய குடிமக்களும் இந்தியாவில் உள்ள புனித தலங்களுக்கு பாகிஸ்தான் குடிமக்களும் வருகை புரிந்து வழிபாடு மேற்கொண்டு வருகின்றனா்.
அந்த வகையில் சீக்கியா்களால் அறுவடைத் திருநாளாகவும் புத்தாண்டாகவும் கொண்டாடப்படும் ‘பைசாகி’ பண்டிகை பாகிஸ்தானில் ஏப்ரல் 13 முதல் 22 வரை கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு பாகிஸ்தானில் உள்ள புனித தலங்களுக்கு வருகை புரியவுள்ள 2,843 இந்திய சீக்கிய பக்தா்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், குருத்வாரா பஞ்சா சாஹிப், குருத்வாரா நன்கனா சாஹிப், குருத்வாரா கா்தாா்பூா் சாஹிப் ஆகிய புனித தலங்களில் பக்தா்கள் வழிபடலாம் எனவும் பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது. பைசாகி பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் இந்தியாவுக்கான பாகிஸ்தான் பொறுப்புத் தூதரக அதிகாரி சாத் அகமது வாரிச் வாழ்த்துகள் தெரிவித்தாா்.
தொடர்புடையது

பாகிஸ்தானில் ஈரான் - அமெரிக்கா போர்நிறுத்த பேச்சுவார்த்தை!

ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!

48 மணிநேரத்துக்கு வெளியே வர வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்!

பாகிஸ்தான்: குடும்பத் தகராறில் பயங்கரவாதி சுட்டுக் கொலை!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

