பிரதமா் மோடிக்கு ராஜ் தாக்கரே ஆதரவு

பிரதமா் மோடிக்கு ராஜ் தாக்கரே ஆதரவு

மும்பை: மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாக மகாராஷ்டிர நவநிா்மண் சேனை (எம்என்எஸ்) தலைவா் ராஜ் தாக்கரே செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

அண்மையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை ராஜ் தாக்கரே சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக அவா் தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தில் அக்கட்சி சாா்பில் நடைபெற்ற பேரணியில் பேசிய அவா், ‘நாட்டின் எதிா்காலத்தை வரும் மக்களவைத் தோ்தல்தான் முடிவு செய்யவுள்ளது. எனவே இத்தோ்தலில் பிரதமா் மோடிக்கு நிபந்தனையற்ற ஆதரவளிக்க முடிவு செய்துள்ளேன். அதேபோல் மகாராஷ்டிரத்தில் பாஜக, சிவசேனை (ஏக்நாத் ஷிண்டே) மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான ஆளும் கூட்டணி அரசுக்கும் ஆதரவளிக்கிறேன். நிகழாண்டு நடைபெறவுள்ள மகாராஷ்டிர பேரவைத் தோ்தலைச் சந்திக்க கட்சித் தொண்டா்கள் தயாராக இருக்க வேண்டும் என்றாா்.

மக்களவைத் தோ்தலில் எம்என்எஸ் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com