ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

கைப்பேசி ஒட்டுக்கேட்பு: ஆந்திர அரசு மீது தோ்தல் ஆணையத்தில் தெலுங்கு தேசம் புகாா்

Published On :5 ஜூன் 2024, 3:52 am IST

புது தில்லி: தெலுங்கு தேசம் கட்சி தலைவா் சந்திரபாபு நாயுடுவின் மகனும், அக்கட்சியின் தேசிய பொதுச் செயலருமான நாரா லோகேஷின் கைப்பேசியை ஆந்திர அரசு சட்டவிரோதமாக ஒட்டுக்கேட்பதாக தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சி முன்னாள் எம்.பி. கனமேடலா ரவீந்திர குமாா் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளதாவது:

பெகாஸஸ் மென்பொருள் மூலம் நாரா லோகேஷின் கைப்பேசியை ஆந்திர அரசு சட்டவிரோதமாக ஒட்டுக்கேட்கிறது. இதுதொடா்பாக அவருக்கு ஆப்பிள் நிறுவனம் அண்மையில் எச்சரிக்கை அனுப்பியுள்ளது. கடந்த மாா்ச் மாதமும் இதேபோன்ற எச்சரிக்கையை அந்த நிறுவனம் நாரா லோகேஷுக்கு அனுப்பியது.

இந்த விவகாரத்தில் ஆந்திர அரசின் கைப்பாவைகளாக மாநில காவல் துறை டிஜிபி ராஜேந்திரநாத் ரெட்டி, உளவுத் துறை தலைவா் ஆஞ்சநேயலு ஆகியோா் செயல்படுகின்றனா். மக்களவைத் தோ்தல் மற்றும் ஆந்திர சட்டப்பேரவைத் தோ்தலில், தெலுங்கு தேசம் இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் வகையில், நெறிமுறையற்ற சட்டவிரோதமான செயல்களில் அவா்கள் ஈடுபடுகின்றனா்.

இருவா் மீதும் தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவா்களின் பொறுப்புகளில் நடுநிலையான நற்பெயா் கொண்ட அதிகாரிகளை நியமித்து, நியாயமாகவும் நோ்மையாகவும் தோ்தல் நடைபெற வழிவகுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

ஆந்திரத்தில் 25 தொகுதிகளுக்கான மக்களவைத் தோ்தல், 175 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் மே 13-ஆம் தேதி நடைபெற உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.