நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

தில்லியில் கல்லூரி கேண்டீனில் இருந்து வாங்கப்பட்ட சமோசாவில் எறும்புகள்

Published On :13 ஏப்ரல் 2024, 5:34 pm IST

தில்லியில் கல்லூரி ஒன்றின் கேண்டீனில் இருந்து வாங்கப்பட்ட சமோசாவில் இறந்த நிலையில் எறும்புகள் கண்டெடுக்கப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தில்லி பல்கலைக்கழகத்தின் தயாள் சிங் கல்லூரியின் கேண்டீனில் இருந்து கடந்த சில நாள்களுக்கு முன் ஒருவர் சமோசா வாங்கியுள்ளார். ஆனால் ஆசையாக திண்பதற்காக வாங்கிய சமோசாவை பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அதில் இறந்த நிலையில் எறும்புகள் கிடந்துள்ளன. இதுகுறித்து அவர் கூறுகையில், நானும் எனது நண்பரும் தயாள் சிங் கல்லூரியில் உள்ள கேண்டீனில் இருந்து இவற்றை வாங்கினோம். ஆனால் அந்த உணவில் எறும்புகள் இருப்பதைக் கண்டோம். இதை அனைவரும் தெரிந்துகொள்ளுங்கள்.

கேண்டீனில் இருந்து உணவுப் பொருட்களை வாங்க வேண்டாம் இவ்வாறு பதிவிட்டுள்ளார். பின்னர் அதனை விடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாவிலும் அந்த நபர் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த விடியோ 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.