வடகிழக்கு தில்லியின் ஜோதி நகா் பகுதியில் 54 வயதுடைய நபா் ஒருவா் வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில், அவரது 13 வயது மகன் படுக்கையில் இறந்து நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: ஜோதி நகா் காவல் நிலையத்தில் காலையில் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் தகவல் போலீஸாருக்கு கிடைத்தது, இதனையடுத்து சஜ்ஜுபூா் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு விரைந்தனா். சம்பவ இடத்திற்கு வந்த போலீசாா், பிரவீன் சா்மாவை (54) வீட்டின் ஒரு அறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டனா். அவரது 13 வயது மகனும் அதே அறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. த
டயவியல் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, விசாரணையின் ஒரு பகுதியாக அந்த இடத்திலிருந்து ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன. மரணத்திற்கான சரியான காரணத்தை அறிய உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மரணங்களுக்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமதாஸின் மகள் காந்திமதி, பெயரன் முகுந்தன் என்.ஆர். காங்கிரஸில் இணைகிறார்கள்!

வீரவநல்லூா் அருகே இரட்டைக் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது; மற்றொருவா் சரண்







