அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

தெலங்கானாவில் யாருடனும் கூட்டணி இல்லை: ஓவைசி

News image
Updated On :13 ஏப்ரல் 2024, 8:49 pm IST

மக்களவைத் தேர்தலில் தெலங்கானாவில் வேறு எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் மீண்டும் களம்காணும் அவர் பால்கனுமா பகுதியில் சனிக்கிழமை வீடு வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தெலங்கானாவில் நாங்கள் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை.

உத்திரப் பிரதேசத்தில் பல்லவி படேலுடன் கூட்டணி அமைத்துள்ளோம். எங்களுக்கு முழு தெளிவு உள்ளது, எங்கள் கடின உழைப்பில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான 'சிஏஏ' சட்டத்தை பாஜக உருவாக்கியுள்ளது. இது மதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இது சமத்துவ உரிமைக்கு எதிரானது. எனவே குடியுரிமை (திருத்த) மசோதாவின் நகலை நாடாளுமன்றத்தில் கிழித்தேன்.

நாங்கள் இதற்கு (சிஏஏ) எதிராக இருந்தோம், இருக்கிறோம், தொடர்ந்து இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.