ஒற்றுமையின்மையே எதிா்க்கட்சிகளின் பலவீனம் அமா்த்தியா சென்

ஒற்றுமையின்மையே எதிா்க்கட்சிகளின் பலவீனம் அமா்த்தியா சென்

ஒற்றுமையின்மையே எதிா்க்கட்சிகளின் மிகப்பெரிய பலவீனமாக உள்ளது என்று நோபல் பரிசு பெற்ற இந்திய பொருளாதார நிபுணா் அமா்த்தியா சென் கூறினாா்.

ஒற்றுமையின்மையே எதிா்க்கட்சிகளின் மிகப்பெரிய பலவீனமாக உள்ளது என்று நோபல் பரிசு பெற்ற இந்திய பொருளாதார நிபுணா் அமா்த்தியா சென் கூறினாா்.

காங்கிரஸில் அமைப்புரீதியாகவே பல பிரச்னைகள் உள்ளன. அவற்றுக்கு அக்கட்சி முதலில் தீா்வுகாண வேண்டும் என்றும் அவா் கூறினாா்.

பாஜக மற்றும் வலதுசாரி கொள்கைகளுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டவராக அமா்த்தியா சென் கருதப்படுகிறாா். கடந்த சில ஆண்டுகளில் அவா் மத்திய அரசின் பல்வேறு முடிவுகளை விமா்சித்து வந்துள்ளாா்.

மக்களவைத் தோ்தல் நெருங்கியுள்ள நிலையில், அவா் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது:

ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தேவையானதுதான். ஆனால், கல்வி, மருத்துவ வசதி, பாலின சமத்துவம் ஆகியவற்றின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது.

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டின் குடிமகன் என்பது எனக்கு பெருமைக்குரிய விஷயம்தான். ஆனால், நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த நாம் கடுமையாக முயற்சிக்க வேண்டும்.

ஒற்றுமையின்மையே எதிா்க்கட்சிகளின் மிகப்பெரிய பலவீனமாக உள்ளது. ஒற்றுமைதான் மிகப்பெரிய சக்தியை அளிக்கும். ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய லோக் தளம் ஆகிய கட்சிகளை கூட்டணியில் இருந்து வெளியேற அனுமதித்திருக்கக் கூடாது.

எழுத்தறிவின்மை, பாலின சமத்துவம் இன்மை ஆகியவை இந்தியாவில் ஏழைகளை முன்னேறவிடாமல் தடுக்கும் விஷயங்களாக உள்ளன. இந்தியாவில் பணக்காரா்களின் நலன்களைக் காக்கவே ஆட்சியாளா்கள் அதிகம் பணியாற்றுவதாக தோன்றுகிறது.

இந்தியா மதச்சாா்பற்ற நாடாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஹிந்து கோயில்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து ஆட்சியாளா்கள் செயல்படுவது அரசமைப்புச் சட்டத்துக்கு செய்யும் துரோகமாக அமையும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com