நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

உ.பி.: ரூ.50க்காக ஏற்பட்ட தகராறில் கடைக்காரரின் விரலை கடித்த நபர்

Published On :14 ஏப்ரல் 2024, 3:35 pm IST

உத்திரப் பிரதேசத்தில் ரூ.50 தகராறில் கடைக்காரரின் விரலை ஒருவர் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலம், பண்டா மாவட்டத்தில் சிவ சந்திர கர்வாரியா என்பவர் துணிக்கடை ஒன்று நடத்தி வருகிறார். இவரது கடையில் வாடிக்கையாளர் ஒருவர் ஃபிராக் வாங்கிக் கொண்டு சென்றிருகிறார். மறுநாள் அந்த நபர் கடைக்குத் திரும்பி, கர்வாரியாவிடம் தான் வாங்கிய ஃபிராக் சிறியது என்றும், பெரிய அளவு வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்.

அதற்கு கடைக்காரர், பெரிய ஃபிராக்கிற்கு மேலும் ரூ.50 கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் வாடிக்கையாளர் ரூ.50 கொடுக்க மறுத்துள்ளார். அப்போது திடீரென்று அந்த நபர் கடைக்காரரின் இடது கை விரலைக் கடித்ததோடு அவரது மகனையும் கடித்து காயப்படுத்தினார்.

பின்னர் அந்த நபர், ஆடைகளை சாலையில் வீசிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். காயமடைந்த கடைக்காரர் கர்வாரியா அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்ட நபரைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.