ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

ஹரியாணா: குடும்ப தகராறில் மனைவி, மகனைச் சுட்டுக்கொன்ற நபர் கைது!

ஹரியாணாவில் குடும்ப தகராறில் மனைவி, மகனைச் சுட்டுக்கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

News image

கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 8:47 am IST

ஹரியாணாவில் குடும்ப தகராறில் மனைவி, மகனைச் சுட்டுக்கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹரியாணா மாநிலம், குருகிராமின் அசோக் விஹார் காலனியில் குடும்ப தகராறில் 50 வயதுடைய நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகனை உரிமம் பெற்ற துப்பாக்கியால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுட்டுக்கொன்றதாக போலீஸார் தெரிவித்தனர்.

குற்றம்சாட்டப்பட்டவர் அனில் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உடனே அவர் காவலில் எடுக்கப்பட்டு பாலம் விஹார் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் மனைவி ஆஷா (45), மகன் பிரசாந்த் (25) இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், தம்பதியினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல் சனிக்கிழமை இரவு அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சப்தம் கேட்டு, மற்றொரு அறையில் தூங்கிக்கொண்டிருந்த பிரசாந்த் எழுந்து வந்து சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.

இந்த மோதலின் போது, ​​அனில் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்து மனைவி மற்றும் மகன் இருவர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் அங்கு அவர்கள் ஏற்கெனவே பலியாகிவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதுகுறித்து மேல் விசாரணை நடைபெற்று வருகிறது. போலீஸார் அங்கு சென்றபோது, உடல்களுக்கு அருகில் அனில் அமர்ந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனில் தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாகச் சேருவதற்கு முன்பு, உடற்கல்வி ஆசிரியராகவும் விளையாட்டுப் பயிற்சியாளராகவும் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

A 50-year-old security officer allegedly shot dead his wife and son with his licensed pistol following a domestic dispute at their residence in Gurugram’s Ashok Vihar colony early Sunday, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.