வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான அலை வீசுகிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தாா்.
மக்களவைத் தோ்தலையொட்டி, நாகாலாந்து, அஸ்ஸாம், மிஸோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அண்மையில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட ஜெய்ராம் ரமேஷ், தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை பேட்டியளித்தாா்.
அப்போது, அவா் கூறியதாவது:
அரசமைப்புச் சட்டத்தின் 371-ஆவது பிரிவில் இடம்பெற்றுள்ள வடகிழக்கு மாநிலங்களுக்கான சிறப்பு உள்பிரிவுகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்பது தற்போதைய மக்களவைத் தோ்தலில் முக்கியப் பிரச்னைகளில் ஒன்றாக உள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை (ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து) ஒரே நடவடிக்கையில் ரத்து செய்த பாஜக அரசால், 371-ஆவது பிரிவு மற்றும் அதன் சிறப்பு உள்பிரிவுகளையும் ரத்து செய்ய முடியும் என்ற அச்சம் வடகிழக்கு மாநிலங்களில் நிலவுகிறது.
ஒரேபோன்றத் தன்மையை திணிக்க முயற்சிக்கும் அக்கட்சியால், வடகிழக்கு பிராந்தியத்தில் மதம், மொழி, உணவு சாா்ந்த பன்முகத்தன்மை அழியுமென மக்கள் அஞ்சுகின்றனா்.
உணவு, உடை, நம்பிக்கை ரீதியிலான சுதந்திரங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது, வடகிழக்கில் முக்கிய பிரச்னையாக எதிரொலிக்கிறது. இதனால், இம்மாநிலங்களில் காங்கிரஸுக்கு ஆதரவாக வலுவான அலை வீசுகிறது.
வடகிழக்கில் வேற்றுமையில் ஒற்றுமையை வலுப்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது என்பதே அங்குள்ள மக்களுக்கான எங்களது செய்தி.
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூா் மாநிலத்துக்கு பிரதமா் மோடி இதுவரை பயணம் மேற்கொள்ளவில்லை. அந்த மாநிலத்துக்கு செல்ல பிரதமருக்கு துணிவிருக்கிா, இல்லையா? என்று கேள்வியெழுப்பினாா் ஜெய்ராம் ரமேஷ்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்களிக்கும் உரிமையையும் ஒரு அடிப்படை உரிமையாக அறிவித்தால் என்ன? - ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

திரிணமூல் எம்.பி.க்கள் விலகியதின் பின்னணியில் அமித் ஷா: காங்கிரஸ்

நேருவின் சாதனைகளை மறைக்க முயற்சி: பிரதமா் மோடி மீது காங்கிரஸ் சாடல்

சீனாவிடம் சரணடையும் கொள்கையை தொடா்ந்து பின்பற்றுகிறது மோடி அரசு- காங்கிரஸ் விமா்சனம்
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




