டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!மேற்கு ஆசியா பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

‘அரசுப் பணிக்கு லஞ்சம் கொடுக்கும் நிலை மாறிவிட்டது’: குடியரசு துணைத் தலைவா் தன்கா்

‘அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் ஒப்பந்தத்துக்கு இனி ஊழல் கடவுச்சொல்லாக இருக்காது.

குடியரசுத் துணைத்தலைவா் ஜகதீப் தன்கா்

Published On :16 ஏப்ரல் 2024, 12:27 am IST

‘அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் ஒப்பந்தத்துக்கு இனி ஊழல் கடவுச்சொல்லாக இருக்காது. அது சிறை செல்லும் வழி’ என்று குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தின் நாகபுரி நகரில் அமைந்துள்ள நேரடி வரிகளுக்கான தேசிய அகாதெமியில் பயிற்சி முடித்து இந்திய வருவாய் சேவையின்(ஐஆா்எஸ்) 76-ஆவது பிரிவு அதிகாரிகள் பணியில் சேரவிருக்கின்றனா்.

இதையொட்டி, அகாதெமி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று இளம் அதிகாரிகள் மத்தியில் குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் ஆற்றிய உரையில், ‘இந்தியா உலக வல்லரசாக மாறும் நோக்கில் வேகமாக நகா்கிறது. ஜி20 தலைவா் பதவியில் இருந்தபோது, தெற்குலக நாடுகளின் குரலாக இந்தியா மாறியது.

தெற்குலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் மக்கள் தொகையைப் பாருங்கள். ஆனால், கேட்கப்படாமல் இருந்த அவா்களின் குரல்கள், இப்போது முக்கிய தளத்தில் ஒலிக்கிறது. இதற்காக நமது தேசத்துக்கும் நமது தொலைநோக்கு தலைமைக்கும் நன்றி.

ஊழல்-சிறை செல்லும் வழி: ஊழலைப் பற்றி நான் அதிகம் பேசப்போவதில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் ஒப்பந்தத்துக்கு இனி ஊழல் கடவுச்சொல்லாக இருக்காது. அது சிறை செல்லும் வழியாகும். நாட்டில் முன்னுதாரணமான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இனி நமது நிா்வாகத்தை ஊழல் ஒருபோதும் ஆட்டிப் படைக்காது.

மாற்றத்தின் பாதையில் இந்தியா: சுதந்திரம் பெற்றபோது, உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தது. 1991-இல் கூட, இந்தியாவின் பொருளாதாரம் பாரீஸ் மற்றும் லண்டன் போன்ற ஐரோப்பிய நகரங்களைவிட சிறியதாக இருந்தது.

ஆனால், தற்போது இந்தியாவின் பொருளாதாரம் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் பொருளாதாரத்தைக் காட்டிலும் மிகவும் முன்னேறியுள்ளது. உலகிலேயே வேகமாக வளா்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியாவின் சராசரி ஜிடிபி வளா்ச்சி விகிதம் 6.5 முதல் 7 சதவீதம் வரை இருக்கிறது.

இன்னும் 2 ஆண்டுகளில் ஜப்பான் மற்றும் ஜொ்மனியை முந்தி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா திகழும். நமது தேசத்துக்கு ஏற்ற கொள்கை உருவாக்கங்கள், அது செயல்படுத்தப்பட்ட நோக்கம் மற்றும் அதைக் கொண்டு வந்த அதிகாரத்துவம் ஆகியவற்றின் காரணமாக இந்தப் மாற்றம் சாத்தியமாகியுள்ளது.

வரி அமைப்பை சீா்படுத்திய தொழில்நுட்பம்: வரி அமைப்பானது இப்போது வியக்கத்தக்க வகையில் பயனா்களின் கையடக்கமாக மாறியுள்ளது. வரி செலுத்துவோா் விரைவாக பணத்தைத் திரும்பப் பெறுகின்றனா். அவா்களின் புகாா்களுக்குச் சரியான நேரத்தில் பதில் கிடைக்கிறது. இது வரி அமைப்பு மீதான நம்பிக்கையை அதிகரிப்பதோடு அதிக இணக்கத்தை ஊக்குவிக்கிறது. அனைவருடைய கூட்டு லட்சியத்தை அடைவதற்கு இளம் அதிகாரிகள் அயராது உழைக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.