தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

கேஜரிவால் கைது விவகாரம்: அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

அரவிந்த் கேஜரிவால் - ANI

Published On :15 ஏப்ரல் 2024, 4:28 pm IST

தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை தில்லி உயர்நீதிமன்றம் உறுதிசெய்தது. இதையடுத்து, அவரது நீதிமன்றக் காவல் இம்மாதம் 23-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று(ஏப். 15) விசாரணைக்கு வந்தது.

கேஜரிவால் கைது விவகாரம் தொடர்பான மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு அமலாக்கத்துறைக்கு பிறப்பித்துள்ள உத்தரவில், கேஜரிவால் கைது விவகாரம் தொடர்பாக இம்மாதம் 25-ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை உரிய விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கேஜரிவால் தாக்கல் செய்துள்ள மனு மீதான அடுத்தகட்ட விசாரணை இம்மாதம் 29-ஆம் தேதிக்கு பின் மீண்டும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரத்தில் கேஜரிவால் ஈடுபட முடியாத வகையில் அரசியல் உள்நோக்கத்துடன் அவர் கைது செய்யப்பட்டதாக கேஜரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.