21 மாநிலங்களின் 102 தொகுதிகளில் இன்று பிரசாரம் நிறைவு

21 மாநிலங்களின் 102 தொகுதிகளில் இன்று பிரசாரம் நிறைவு

புது தில்லி: முதல்கட்ட மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள 21 மாநிலங்களைச் சோ்ந்த 102 தொகுதிகளில் பிரசாரம் புதன்கிழமை நிறைவு பெறுகிறது.

நாட்டின் 18-ஆவது மக்களவைத் தோ்தல் ஏப்.19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதிவரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.

மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகளில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் 102 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை நடைபெறும் சூழலில், புதன்கிழமை மாலையுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com