விண்டோஸ் 11 செயல்திறன் காமெடியாக உள்ளது: முன்னாள் மைக்ரோஃசாப்ட் ஊழியர்

விண்டோஸ் 11 செயல்திறன் காமெடியாக உள்ளது: முன்னாள் மைக்ரோஃசாப்ட் ஊழியர்
மடிக்கணினி வெடித்ததில் ஐ.டி. பெண் ஊழியர் கவலைக்கிடம்
மடிக்கணினி வெடித்ததில் ஐ.டி. பெண் ஊழியர் கவலைக்கிடம்

விண்டோஸ் 11-ஐ உருவாக்கிய குழுவில் அங்கம் வகித்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஆன்டி யங், அதன் செயல்திறன் காமெடியாக உள்ளதாக விமரிசித்துள்ளார்.

ஆன்டி யங், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றியவர். அண்மையில், அவர் விண்டோஸ் 11-ன் செயல்திறன் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக பொருமையாக வரும் ஸ்டார்ட் மெனுவைப் பற்றியும் அவர் குறிப்பிடுகிறார்.

சக்திவாய்ந்த கோர் ஐ9 சிபியு மற்றும் 128 ஜிபி ராம் கொண்ட உயர்நிலை கணினியாக இருந்தாலும், கணினியின் தேடல் வசதி மெதுவாக இயங்குவது மிகுந்த வலியை உணரவைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் தனது அதிருப்தியை சமூக வலைத்தளத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். அதில், ஸ்டார்ட் மெனு சரியாக இயங்காமல் இருக்கும் விடியோவையும் எடுத்து இணைத்துள்ளார். சர்ச் ஆப்ஷன் இயங்காததால், அவர் கணினியை ரீஸ்டார்ட் செய்கிறார். மீண்டும் அவர் முயற்சிக்கும்போது, எல்லாம் மிக மெதுவாக நகர்கிறது. சர்ச் என்பதை கிளிக் செய்து அந்த வாய்ப்பு வருவதற்கே அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.

விண்டோஸ் 11 செயல்திறன் குறித்து அதன் அங்கமாக இருந்தவரே விமரிசித்திருப்பது கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. விண்டோஸ் இயங்குதளம் மீது எனக்கு எப்போதும் ஒரு தனிக்காதல் உண்டு. ஆனால், தற்போது அதன் செயல்திறன் குறித்து பயனர்களின் அதிருப்தியை நேர்மையாக நான் சொல்லியாக வேண்டும் என்கிறார்.

இந்தப் பிரச்சனைகள் யங்கின் தனிப்பட்ட பிரச்சனைகள் மட்டுமல்ல - 2021 இல் விண்டோஸ் 11 இயங்குதளம் வெளியானது முதல் பலரும் எதிர்கொள்ளும் சவால்களின் ஒரு பகுதியாக அவை பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கணினியின் கடும் தேவைகளால், பலருக்கும் இயங்குதளத்தை அப்கிரேட் செய்வதை கடினமாக்கியது, வணிக நிறுவனங்கள் விண்டோஸ் 11 இயங்குதளத்தை ஏற்றுக்கொள்வது தாமதமாக இதுவும் முக்கிய காரணமாக அமைந்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com