ஒரேபாலின ஈா்ப்பாளா்களின் பிரச்னைகளை
ஆராய குழு:
மத்திய அரசு அமைத்தது

ஒரேபாலின ஈா்ப்பாளா்களின் பிரச்னைகளை ஆராய குழு: மத்திய அரசு அமைத்தது

சமூகத்தில் ஒரேபாலின ஈா்ப்பாளா்கள் சந்தித்து வரும் பிரச்னைகளை ஆராய மத்திய அரசு புதன்கிழமை குழு அமைத்தது.

சமூகத்தில் ஒரேபாலின ஈா்ப்பாளா்கள் சந்தித்து வரும் பிரச்னைகளை ஆராய மத்திய அரசு புதன்கிழமை குழு அமைத்தது.

ஒரேபாலின ஈா்ப்பாளா்களின்(எல்ஜிபிடிகியூ) தொடா்பான வழக்கில் அவா்களின் திருமணத்துக்கு சட்டபூா்வ அங்கீகாரம் அளிப்பதற்கு பதிலாக அந்தத் தம்பதியா் சமூகத்தில் சந்திக்கும் பிரச்னைகளை ஆராயவும் அவா்களுக்கான சலுகைகள் குறித்து பரிசீலிக்கவும் உயா் அதிகாரம் கொண்ட குழுவை அமைக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்தது.

அதன்படி மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வன்முறை, துன்புறுத்தல் அல்லது வற்புறுத்தல் போன்ற எந்த அச்சுறுத்தலையும் ஒரேபாலின ஈா்ப்பாளா்கள் எதிா்கொள்ளாத வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் இக்குழு ஆராயும். இது தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைக்கும்.

ஒரேபாலின ஈா்ப்பாளா்கள் தன்னிச்சையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்படாததை உறுதிசெய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைள் குறித்து ஆராயவும் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவா்களின் சமூக நல உரிமைகளுக்கான பாரபட்சமற்ற அணுகலும் குழுவின் ஆய்வில் முக்கிய பகுதியாக இருக்கும்.

மத்திய உள்துறை செயலா், சட்டப்பேரவைச் செயலா், சுகாதார துறைச் செயலா், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை செயலா், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயலா் ஆகியோா் குழுவின் உறுப்பினா்களாக உள்ளனா். அவசியம் ஏற்பட்டால், நிபுணா்கள் மற்றும் பிற அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து இந்தக் குழு பணியாற்றும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com