அமேதியில் போட்டியா? நேரடி பதிலைத் தவிர்த்த ராகுல் காந்தி!

அமேதி தொகுதியில் ராகுலின் போட்டி பற்றி பதிலளிப்பு!
ராகுல் காந்தி
ராகுல் காந்திANI

ராகுல் காந்தி மூன்று முறை வெற்றி பெற்ற உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிடுவாரா என்கிற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல் தவிர்த்துள்ளார்.

மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் (ஏப்.19) நடைபெறவுள்ள நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தியும், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் கூட்டாக செய்தியாளர்கள சந்தித்துப் பேசினார்.

அப்போது அமேதி தொகுதியில் போட்டியிடுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “கட்சி அதனை தீர்மானிக்கும். கட்சியின் முடிவை நான் பின்பற்றுவேன். காங்கிரஸ் கட்சியில் அனைத்து முடிவுகளும் கட்சியின் தேர்தல் குழு கூட்டத்தில் எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

அதே போல, பிரியங்கா காந்தி முன்னதாக போட்டியிட்ட ரே பரேலி தொகுதியிலும் பிரியங்கா நிற்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

இவ்விரு தொகுதிகளும் காங்கிரஸின் கோட்டையாக கருதப்படுவதால் ராகுலையும் பிரியங்காவையும் அந்த தொகுதிகளில் போட்டியிட உள்ளூர் காங்கிரஸ் கட்சியினர் கோரி வருகின்றனர்.

ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார்.

ராகுல் காந்தி
ஊழலின் சாம்பியன் மோடி: ராகுல் விமர்சனம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com