மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும், பாஜக எம்பி ரவி சங்கர் பிரசாத்துக்கும் இடையே புதன்கிழமை கருத்து மோதல் ஏற்பட்டது.
மக்களவையில் அவைத் தலைவர் ஓம் பிர்லாவை பதவி நீக்கம் செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வருகின்றன.
இந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய பாஜக மூத்த எம்பியும், முன்னாள் அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத், ”எதிர்க்கட்சித் தலைவர் தனது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும், குறிப்பாக, தேசிய பாதுகாப்பு பிரச்னைகள் குறித்து பேசும்போது” எனத் தெரிவித்தார்.
இதனிடையே, ரவி சங்கரின் உரையைக் குறிக்கிட்டு ராகுல் காந்தி பேசியதாவது:
”இந்த விவாதமானது ஜனநாயக செயல்முறை மற்றும் அவைத் தலைவரின் பங்கு பற்றியது. ஆனால், பல முறை எனது பெயர் எழுப்பப்படுகிறது. என்னைப் பற்றிய விஷயங்கள் பேசப்படுகின்றன. இந்த அவை ஒரு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துவது கிடையாது. முழு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
நான் எப்போதெல்லாம் பேச முயற்சிக்கிறேனோ அப்போதெல்லாம் தடுக்கின்றனர். கடைசியாக நான் பேசியபோது, பிரதமர் சமரமானது பற்றி அடிப்படை கேள்விகளை எழுப்பினே.
நரவணே பிரச்னையையும், எப்ஸ்டீன் கோப்புகள் பிரச்னைகளையும், அதானி பிரச்னைகளையும் எழுப்பினேன். அப்போதெல்லாம் நான் அமைதியாக்கப்பட்டேன். இதெல்லாம் இந்திய மக்களுக்கு அடிப்படையானவை. பிரதமர் பணிந்துவிட்டார். அவர் பணிந்துவிட்டதால் ஏற்படும் விளைவு அனைவருக்கும் தெரியும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ரவிசங்கர் பிரசாத், "பிரதமர் நரேந்திர மோடியை ஒருபோதும் பணிய வைக்க முடியாது என்பதை எதிர்க்கட்சித் தலைவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஒருவரின் ஈகோவுக்காக இந்த தீர்மானத்தை மக்களவையில் விவாதிப்பது வேதனை அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.
Summary
Rahul Gandhi vs Ravi Shankar Prasad in Lok Sabha! Heated debate!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிம்லாவில் ராகுல் காந்தி!

பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி

எப்ஸ்டீன் கோப்பு, அதானி வழக்கின் இடையில் சிக்கியுள்ள பிரதமர் மோடி: ராகுல்

இந்தியாவை விற்றதில் வெட்கமாக இல்லையா? மக்களவையில் ராகுல் காந்தி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


