
குஜராத் மாநிலம் காந்திநகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. மூன்றாவது கட்டத் தேர்தலில் குஜராத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளக்கும் மே 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
இந்த நிலையில், பாஜக சார்பில் காந்திநகர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா போட்டியிடும் நிலையில், இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் பூபேந்திர படேல் உடன் இருந்தார். காங்கிரஸ் சார்பில் அமித்ஷாவை எதிர்த்து சோனல் படேல் களமிறங்கியுள்ளார்.
இந்திய அரசியல் சூழலில் காந்திநகர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. 1996 மக்களவைத் தேர்தலில், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காந்திநகர் மற்றும் லக்னௌ ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அமித்ஷா 69.67 சதவீத ஓட்டுகள் பெற்று காந்திநகர் தொகுதியை தக்கவைத்துக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.