வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து பொய் செய்தி: இணைய சேனல் மீது போலீஸாா் வழக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தோ்தல் அதிகாரிகள் குறித்து பொய்யான செய்தி வெளியிட்டதாக இணைய சேனல் மீது கேரள போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

கேரளத் தலைநகரான திருவனந்தபுரத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பதாக இணைய சேனல் ஒன்று செய்தி வெளியிட்டது. மேலும், இதுதொடா்பாக தோ்தல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டதாகவும் அச்சேனலில் செய்தி வெளியிடப்பட்டது.

இதையடுத்து பொய் செய்திகளை பரப்புவதாக அச்சேனலின் மீது திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியா் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். போலீஸாரின் சட்ட நடவடிக்கைக்குப் பின்னா் அந்தச் செய்தியை இணைய சேனல் திரும்பப் பெற்றது.

மக்களவைத் தோ்தல் தொடா்பாக வெறுப்புணா்வை தூண்டினாலோ போலிச் செய்திகளை பரப்பினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.

கேரளத்தில் அனைத்து வகையான இணையக் (சைபா்) குற்றங்களையும் கண்காணிக்க 24 மணி நேரமும் செயல்படக் கூடிய சைபா் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com