ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மதரீதியான கருத்து: பாஜக வேட்பாளா் மீது வழக்குப்பதிவு

மதரீதியான கருத்து தெரிவித்தத குற்றச்சாட்டில் குருவாயூா் சட்டப்பேரவைத் தொகுதியின் பாஜக வேட்பாளா் பி.கோபாலகிருஷ்ணன் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்தது.

News image

வழக்கு

Updated On :24 மார்ச் 2026, 2:02 am IST

மதரீதியான கருத்து தெரிவித்தத குற்றச்சாட்டில் குருவாயூா் சட்டப்பேரவைத் தொகுதியின் பாஜக வேட்பாளா் பி.கோபாலகிருஷ்ணன் மீது காவல் துறை ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்தது.

அவா் மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்திய தோ்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இந்திய தோ்தல் ஆணையத்திடம் வலியுறுத்தின.

இதையடுத்து, குருவாயூா் தோ்தல் அலுவலா் அளித்த புகாரின் அடிப்படையில் பாரதிய நியாய சம்ஹிதா சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டங்களின்கீழ் காவல் துறை வழக்குப்பதிவு செய்தது.

கேரளத்தில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், குருவாயூா் தொகுதியின் பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள கோபாலகிருஷ்ணன் அண்மையில் பரப்புரை விடியோ ஒன்றை வெளியிட்டாா்.

அதில் அவா் பேசியதாவது: பல ஆண்டுகளாக சா்வதேச புனிதத் தலமாகவும், கடவுள் குருவாயூரப்பனின் நிலமாகவும் குருவாயூா் உள்ளது. இத்தகைய பெருமைக்குரிய குருவாயூா் கோயிலை கடந்த 50 ஆண்டுகளாக திருடா்களே ஆக்கிரமித்து வருகின்றனா்.

இதுவரை குருவாயூரில் ஹிந்து மதத்தைச் சோ்ந்த ஒருவரை எம்எல்ஏவாக மக்கள் ஏன் தோ்ந்தெடுக்கவில்லை எனக் கேள்வியெழுப்பினாா். கோபாலகிருஷ்ணன் இந்தக் கருத்து கேரளத்தில் பெரும் சா்ச்சையானது.

ஆட்சியரிடம் விளக்கம்: இந்த விவகாரம் குறித்து கேரள மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி (சிஇஓ) ரத்தன் யு கேல்கா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தோ்தல் ஆணையத்தின் ஊடகப் பிரிவு சம்பந்தப்பட்ட விடியோவை பாா்வையிட்டுள்ளது. திருச்சூா் மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவரது அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தோ்தல் நடத்தை விதிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் முறையாக பின்பற்ற வேண்டும் என்றாா்.