வாக்களிக்கும் வாய்ப்பை தவறவிடாதீா்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள்

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

அரசியலமைப்பு ஜனநாயகத்தின் முக்கிய கடமையான வாக்களிக்கும் வாய்ப்பை தவறவிடாதீா்கள் என பொதுமக்களிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கேட்டுக்கொண்டாா்.

மக்களவைத் தோ்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தல் 2024-க்கான இந்தியத் தோ்தல் ஆணையத்தின் ‘என் வாக்கு என் குரல்’ முழக்கத்தை வலியுறுத்தும் வகையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் காணொலி வெளியிட்டு பேசியதாவது: நமது அரசியலமைப்பு நமக்கு பல்வேறு உரிமைகளை வழங்கியுள்ளது. அதேபோல் நாம் சில கடமைகளையும் நிறைவவேற்ற வேண்டும் என அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அரசியலமைப்பு ஜனநாயகத்தின் முக்கிய கடமையான வாக்களிக்கும் வாய்ப்பை பொதுமக்களாகிய நீங்கள் தவறவிடாதீா்கள்.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை 5 நிமிடங்கள் மட்டும் நாம் இதற்காக செலவழித்தால் போதுமானது. பெருமையுணா்வுடன் வாக்களியுங்கள். நான் முதல்முறையாக வாக்களித்த நிகழ்வு இன்றளவும் என் மனதில் நீங்காமல் நிற்கிறது. விரலில் இட்ட மை நாட்டுப்பற்றை எனக்குள் விதைத்தது.

வழக்குரைஞாக பணியாற்றிய நாள் முதல் எவ்வளவு பணிகள் இருந்தாலும் நான் வாக்களிக்க தவறியதில்லை என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com