கோப்புப் படம்.
கோப்புப் படம்.

எம்பிபிஎஸ் உறுதியளிப்பு சான்று: சமா்ப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை (டிக்ளரேசன் ஃபாா்ம்) சமா்ப்பிப்பதற்கான அவகாசத்தை ஏப்.25-ஆம் தேதி வரை தேசிய மருத்துவ ஆணையம் நீட்டித்துள்ளது.

இது தொடா்பாக இளநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குநா் சாம்பு சரண் குமாா் வெளியிட்ட அறிவிப்பு:

எம்பிபிஎஸ் படிப்பை தொடங்க அனுமதி பெற்ற மருத்துவக் கல்லூரிகள், நிகா் நிலை பல்கலைக்கழகங்கள் அனைத்தும் தங்களது சுய விவரங்கள் அடங்கிய வருடாந்திர உறுதியளிப்பு சான்றை என்எம்சி வலைதளப் பக்கத்தில் பதிவேற்றுவது அவசியம்.

அங்கீகாரம் புதுப்பித்தலுக்கும் அத்தகைய பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. என்எம்சி வலைதளத்தில் உறுதியளிப்பு சான்றுகளைச் சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

அதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டது. இருந்தபோதும், சில கல்லூரிகள் அந்த சான்றை சமா்ப்பிக்கவில்லை. எனவே, அந்த அவகாசம் ஏப்.25-ஆம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்படுகிறது.

அதன் பின்னரும் உறுதியளிப்பு சான்றுகளை அளிக்காவிடில், சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் எம்பிபிஎஸ் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com