தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கவனத்தை திசைதிருப்ப புதிய உக்திகளை கையாளும் மோடி: ராகுல் குற்றச்சாட்டு

கவனத்தை திசைதிருப்ப புதிய உக்திகளை கையாளும் மோடி என்று ராகுல் குற்றச்சாட்டியுள்ளார்.

News image
நரேந்திர மோடி / ராகுல் காந்தி
Updated On :22 ஏப்ரல் 2024, 6:05 am

DIN

இருக்கும் பிரச்னைகளிலிருந்து மக்களை திசை திருப்ப பிரதமர் நரேந்திர மோடி புதிய உக்திகளைக் கையாள்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

செல்வங்களை மறுபகிர்வு செய்துகொள்வதா பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியை குற்றம்சாட்டியிருந்த நிலையில்,முதல் கட்ட வாக்குப்பதிவு குறித்து மனம் உடைந்துபோயிருக்கும் மோடி, பொய்களையும், மோசமான பேச்சுகளையும் பேசி, மக்களை உண்மையான பிரச்னைகளிலிருந்து திசைதிருப்ப முயல்வதாக குற்றம்சாட்டியுள்ளார் ராகுல் காந்தி.

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு விவரகாரங்கள் குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல், நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டமும் விலைவாசி உயர்வும் கடுமையாக இருக்கிறது. ஆனால் அனைத்தும் நன்றாக இருப்பதாக பிரதமர் மோடி கூறுகிறார். அவர், பிரச்னைகளிலிருந்து மக்களை திசைதிருப்ப பல்வேறு உக்திகளைத் தெரிந்துவைத்திருக்கிறார். ஆனால், அவரது பொய்சொல்லும் வேலை முடிவுக்கு வரவிருக்கிறது என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

மக்களவைக்கான இரண்டாம் கட்டத் தோ்தலையொட்டி, ராஜஸ்தான் மாநிலம், ஜாலோா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி, குடும்ப ஆட்சி, ஊழல் ஆகிய ‘கறையான்களை’ பரப்பி, நாட்டை வெறுமையாக்கியது காங்கிரஸ். இன்று ஒட்டுமொத்த நாடும் காங்கிரஸ் மீது கடுங்கோபத்தில் உள்ளது. அக்கட்சி தனது தவறுகளுக்காகத் தண்டிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸின் மிக மோசமான நிலைமைக்கு அக்கட்சியே பொறுப்பு. ஒரு காலத்தில் 400 தொகுதிகளில் வென்ற அக்கட்சியால், இப்போது 300 தொகுதிகளில்கூட சுயமாகப் போட்டியிட முடியவில்லை. வேட்பாளா்களே கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று கடுமையான விமரிசித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.