வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

அமேதியில் ராகுல் காந்தியின் வீடு புதுப்பிப்பு - மீண்டும் போட்டியில் களமிறக்கும் அறிகுறிகள்
ராகுல் காந்தி
ராகுல் காந்திANI

ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடுவாரா என்கிற கேள்வி இருந்து வருகிறஹ்டு. தற்போது அமேதியில் உள்ள அவரது வீடு புதுப்பிக்கும் பணி தொடங்கியது இந்த கேள்விக்கு பதிலளிப்பது போல் உள்ளதாக காங்கிரஸ் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அமேதி மற்றும் ரே பரேலி ஆகிய விஐபி தொகுதிகளுக்கு இன்னும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. தொடர்ச்சியாக 3 முறை ராகுல் காந்தி வெற்றி பெற்ற தொகுதியில் கடந்த ஒரு முறை பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியைச் சந்தித்தார்.

இந்த மக்களவை தேர்தலில் வயநாட்டில் போட்டியிடும் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் அமேதியில் போட்டியிடுவது குறித்து எழுந்த கேள்விக்குக் கட்சி அதனை முடிவு செய்யும் என பதிலளித்தார்.

தற்போது ராகுல் காந்தியின் அமேதி வீட்டைச் சுத்தப்படுத்தும் மற்றும் புதுப்பிக்கும் பணி அவரது தேர்தல் பிரசாரத்திற்காக தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பணிகள் வழக்கமாக நடைபெறுபவை எனவும் அவர் போட்டியிடவில்லையென்றாலும் பிரசாரத்துக்கு நிச்சயம் வருவார் எனவும் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

அமேதியில் வாக்குப் பதிவு 5-ம் கட்ட தேர்தல் நாளான மே 20-ல் நடைபெறவுள்ளது. வயநாடு வாக்குப்பதிவு முடிந்தவுடன் ஏப்ரல் 26-ம் தேதிக்கு பிறகு இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com