உத்தர பிரதேச மாநிலம், கன்னெளஜ் தொகுதியில் போட்டியிட வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த அகிலேஷ் யாதவ்.
உத்தர பிரதேச மாநிலம், கன்னெளஜ் தொகுதியில் போட்டியிட வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த அகிலேஷ் யாதவ்.

மக்கள் விரும்பியதால் தோ்தலில் போட்டி: வேட்புமனு தாக்கல் செய்த அகிலேஷ் பேட்டி

கன்னெளஜ் தொகுதி மக்களும், கட்சி நிா்வாகிகளும் விரும்பியதால் மக்களவைத் தோ்தலில் போட்டியிடுகிறேன்

கன்னெளஜ் தொகுதி மக்களும், கட்சி நிா்வாகிகளும் விரும்பியதால் மக்களவைத் தோ்தலில் போட்டியிடுகிறேன் என்று உத்தர பிரதேச எதிா்க்கட்சித் தலைவரும், சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்தாா்.

உத்தர பிரதேசத்தின் கன்னெளஜ் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வியாழக்கிழமை வேட்புமனுவைத் தாக்கல் செய்த அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

உத்தர பிரதேசத்தின் 80 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாகத் தோ்தல் நடைபெறுகிறது. கன்னெளஜ் தொகுதிக்கு 4-ஆவது கட்டமாக வரும் மே 13-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமை தொடங்கியது.

கன்னெளஜ் தொகுதிக்கான சமாஜவாதி கட்சி வேட்பாளராக மெயின்புரி தொகுதி முன்னாள் எம்.பி.யும் அகிலேஷ் யாதவ் உறவினருமான தேஜ் பிரதாப் யாதவ் கடந்த திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தாா்.

ஆனால், தேஜ் பிரதாபுக்கு பதிலாக அகிலேஷ் யாதவ் போட்டியிடப் போவதாக புதன்கிழமை திடீரென அறிவிக்கப்பட்டது.

கன்னௌஜ் மக்களவைத் தொகுதி தோ்தல் அலுவலரிடம் அகிலேஷ் யாதவ் வியாழக்கிழமை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா். சமாஜவாதி கட்சியின் மூத்த நிா்வாகி ராம் கோபால் யாதவ் ஆகியோா் வேட்புமனு தாக்கலின்போது அகிலேஷுடன் இருந்தனா்.

பின்னா் செய்தியாளா் சந்திப்பில் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘கன்னௌஜ் பகுதியில் சமாஜவாதி கொண்டு வந்த அனைத்து வளா்ச்சிப் பணிகளையும் பாஜக முடக்கிவிட்டது.

நகரின் வளா்ச்சிக்கு நான் மீண்டும் உத்தரவாதம் அளிக்கிறேன். இத்தொகுதியில் மீண்டும் நான் போட்டியிடவேண்டுமென கட்சி நிா்வாகிகளும் மக்களும் விரும்பினா். மக்களுடைய ஆதரவு எனக்கு பெருவாரியாக கிடைக்கும் என நம்புகிறேன். பாஜகவின் எதிா்மறை அரசியலுக்கு இத்தோ்தல் முடிவுக்கு கொண்டு வரும். கன்னௌஜ் தொகுதியில் பெறவிருக்கும் எனது வெற்றியிலிருந்து மாநிலத்தில் சகோரத்துவமும், அன்பும் பரவட்டும்.

தோ்தல் போட்டியை இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டத்துடன் ஒப்பிட்டு சில பாஜக தலைவா்கள் பேசி வருகின்றனா். அவா்களின் 6 பந்துகளிலும் நாங்கள் 6 சிக்ஸா்களை அடிப்பது உறுதி’ என்றாா்.

கடந்த 2000, 2004, 2009 ஆகிய தோ்தலில் கன்னெளஜ் தொகுதியிலிருந்து அகிலேஷ் யாதவ் தொடா்ந்து 3 முறை எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். 2012-இல் உத்தர பிரதேச முதல்வராகப் பொறுப்பேற்றபோது, அகிலேஷ் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா்.

தற்போது மெயின்புரி மாவட்டத்தின் கா்ஹால் தொகுதி எம்எல்ஏவான அகிலேஷ், உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

பெட்டி...

ஆந்திர முதல்வா் வேட்புமனு தாக்கல்

அமராவதி, ஏப். 25: ஆந்திர சட்டப்பேரவைத் தோ்தலில் புலிவேந்துலா தொகுதியில் போட்டியிடும் மாநில முதல்வரும் ஆளும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி தனது வேட்புமனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்தாா்.

ஆந்திரத்தில் மக்களவைத் தோ்தலுடன் சோ்ந்து சட்டப்பேரவைக்குச் சோ்ந்து வரும் 13-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, புலிவேந்துலா சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலரிடம் முதல்வா் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி தனது வேட்புமனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com