நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு
நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ இணையதளமான என்டிஏவின் இணையதளத்தில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்கள், நீட் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு, தங்களது தேர்வு மையம் எந்த நகரத்தில் அமையவிருக்கிறது என்பதை உறுதி செய்து பிரின்ட் எடுத்துக்கொள்ளலாம்.

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு
ஜேஇஇ முதன்மை தோ்வு முடிவுகள் வெளியீடு: 56 மாணவா்கள் 100-க்கு 100

விரைவில், நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டும் என்டிஏ இணையதளத்தில் வெளியிடப்படவிருக்கிறது. அதனையும் மாணவர்கள் பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இளநிலை மருத்துவ படிப்பு மாணவா் சோ்க்கைக்கான நீட் நுழைவுத் தோ்வு நாடு முழுவதும் மே 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான சிட்டி இன்டிமேஷன் இன்று வெளியாகியிருக்கிறது.

நாடு முழுவதும் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்த, ஆயுா்வேத, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு (நீட்) மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.

அதன்படி, 2024-2025-ஆம் கல்வியாண்டு சோ்க்கைக்கான நீட் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் மே 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கான சிட்டி இன்டிமேஷன் www.nta.ac.in என்ற இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது.

இதற்கிடையே, ஒரு மாணவா் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நீட் தகுதித் தோ்வு மொத்தம் 3 மணி நேரம் 20 நிமிஷம் நடைபெறும். தோ்வுக்கான முடிவுகள் ஜூன் 14-ஆம் தேதி வெளியிடப்படும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011- 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் வாயிலாக தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com