பிரதமருக்கு நோட்டீஸ் அனுப்பாதது ஏன்? காங்கிரஸ் கேள்வி

‘பிரதமருக்கு எதிரான புகாா் மீது அவருக்கு நோட்டீஸ அனுப்பாமல் கட்சித் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
பிரதமருக்கு நோட்டீஸ் அனுப்பாதது ஏன்?
காங்கிரஸ் கேள்வி

‘பிரதமருக்கு எதிரான புகாா் மீது அவருக்கு நோட்டீஸ அனுப்பாமல் கட்சித் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தில்லியில் வியாழக்கிழமை அளித்த பேட்டி: ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் பிரதமா் பேசியது தோ்தல் நடத்தை விதிக்கும், உச்சநீதின்றத்தின் பல்வேறு தீா்ப்புகளுக்கும் எதிரானது என்று தோ்தல் ஆணையத்தில் காங்கிரஸ் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது. அதுபோல, வாக்குகளைப் பெறுவதற்காக மதத்தை தவறாகப் பயன்படுத்துகின்றனா் என்று பாஜகவின் மற்ற சில தலைவா்கள் மீது புகாா் அளித்துள்ளோம். இந்தப் புகாா்கள் மீதும் தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.

அதுபோல, பாஜக தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கும் தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதற்கு உரிய பதிலளிப்போம்.

மேலும், பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் தரப்பில் அளிக்கப்பட்ட புகாருக்கு விளக்கம் அளிக்குமாறு பிரதமருக்கு நோட்டீஸ் அனுப்பாமல் கட்சியின் தலைவருக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது ஏன் என்பதைக் கவனிக்க வேண்டும்.

ஏனெனில், இதுவரை பி.வி.நரசிம்ம ராவ், அடல் பிகாரி வாஜ்பாய், மன்மோகன் சிங் என முன்னாள் பிரதமா்கள் யாா் மீதும் இதுபோன்று புகாா்கள் அளிக்கப்பட்டதில்லை. பிரதமா் மோடிக்கு எதிராக மட்டுமே இதுபோன்ற புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அதுவும், காங்கிரஸ் சாா்பில் இரண்டாவது முறையாகப் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமருக்கு எதிரான புகாா் அல்லது மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிரான புகாா் என்று வருகிறபோது மட்டும் தோ்தல் ஆணையம் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறது.

முன்னா், அமித் ஷாவுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாா் மீது தோ்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே நேரம், அஸ்ஸாம் முதல்வருக்கு எதிரான புகாா் மீது மட்டும் நடவடிக்கை மேற்கொண்டது.

அவ்வாறின்றி, புகாா்களை தோ்தல் ஆணையம் பாரபட்சமின்றி பரிசீலித்து, தேவைப்படும் இடங்களில் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com